நமது கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பணியாளர் தொகுதி அவர்கள் பிற்பகல் நமக்கு நேரம் ஒதுக்கித் தந்தது தொடர்ந்து, அனைத்து கோரிக்கைகளும் தெளிவாகவும் நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் விரிவாக தெரிவித்துள்ளோம் விரைவில் நமது கோரிக்கைகள் ஒன்றொன்றாக நிறைவேற்றித் தருவதாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பணியாளர் தொகுதி அவர்கள் தெரிவித்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
இந்த நிகழ்வில் மாநில நிர்வாகிகள்,மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கலந்து கொண்டனர்
ஈரோடு மாநகரில் 29.02.2020 அன்று மிகப் பிரமாண்டமான நடைபெற்ற மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் எழுச்சி நாயகன் திரு.இரா.சண்முகராஜன் அவர்கள் மற்றும் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மேனாள் தலைவர்கள் திரு.ஆ. சந்திரபோஸ், திரு.மா.சுகுமார், திரு.க.ஷண்முகானந்தம், புதுக்கோட்டை ஜனார்த்தனம் அவர்கள் உள்ளிட்ட இயக்க முன்னோடிகள் கலந்து கொண்ட விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment